பத்மவிபூசன் விருதுடன் ரோடு ஷோ நடத்த முயன்ற பிரேமலதா… குறுக்கே வந்த போலீசார்… விமான நிலையத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan11 May 2024, 3:01 pm
தேமுதிக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று வரையிலும் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம விபூசன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்ற போது, ஒரு நிமிடம் கண்களை மூடி மேல்நோக்கி பார்த்தவாறு விருதை விஜயகாந்திற்கு சமர்ப்பணம் செய்தார்.
மேலும் படிக்க: எல்லாம் மறந்து போச்சா..? மிஞ்சி மிஞ்சிப் போனால், உங்க ஆட்டமெல்லாம் இன்னும் 2 ஆண்டுகள்தானே : திமுகவை சாடிய சீமான்..!!
அப்போது விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க.வினர் குவிந்தனர். இதையடுத்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை தடுக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை தள்ளிவிட்டு தே.மு.தி.க.வினர், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், வாகனப் பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க.வினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.