இபிஎஸ் முன்னிலையில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.. உற்சாகத்தில் அதிமுக : அதிர்ச்சியில் பிரேமலதா!
Author: Udayachandran RadhaKrishnan2 March 2024, 4:30 pm
இபிஎஸ் முன்னிலையில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.. உற்சாகத்தில் அதிமுக : அதிர்ச்சியில் பிரேமலதா!
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தீவிர வியூகங்களை வகுத்து வரும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளுது.
நேற்று சென்னை சாலி கிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
இது ஒரு புறம் இருந்தாலும், தேமுதிகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட பாக்கியராஜ் திடீரென அதிமுகவில் இணைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் பாக்கியராஜ்.

இவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் தேமுதிக பிரமுகர் இணைந்த சம்பவம் பிரேமலதாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.