விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்… மருத்துவமனையில் 3வது நாளாக தீவிர சிகிச்சை… தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 10:08 am

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிய அவர், குடும்பத்தின் அரவணைப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 17ம் தேதி விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதனிடையே, தொண்டர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருப்பதாக தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேவைப்படும் போது செயற்கை சுவாசம் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக சொல்லப்படுகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…