விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி… தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை ; அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 9:44 pm

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிய அவர், குடும்பத்தின் அரவணைப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 370

    0

    0