திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க தைரியம் இருக்கா…? கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் சவால்..!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 2:17 pm

ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க தைரியம் இருக்கா..? என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகாந்த் பிறந்த தெய்வீக மண்ணில் பிறந்த குழந்தைக்கு விஜய ராமச்சந்திரன் என பெயர் சூட்டினார் பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சரவணன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தொண்டர்கள் படை சூழ பிரச்சார பொது கூட்டத்திற்கு வருகை தந்தார்.

மேலும் படிக்க: கண்டுகொள்ளாத பாஜக.. எதையுமே செய்யாத திமுக… வாக்காளர்களுக்கு இபிஎஸ் கடைசியாக வைத்த கோரிக்கை!!

அப்போது, தேமுதிக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மேளதாளத்துடன் மலர்கள் தூவிவரவேற்று தேமுதிக சார்பில் வீரவால் மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது பிரேமலதா வருவதற்கு முன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுக, தேமுதிக பெண்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சி அடைத்தனர்.

பின்பு, பிரமலதா விஜயகாந்த் அவர்கள் பேசியதாவது :- எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் நல்லாசியோடு மகத்தான கூட்டணியாக அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் விரும்பும், வெற்றிக் கூட்டணியாக அதிமுக – தேமுதிக கூட்டணி உள்ளது. மதுரை என்றாலே அதற்கு அடையாளமானவர் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் இல்லாமல் மதுரை வந்தது சோகத்தையும், மன அழுத்தத்தையும் எனக்கு தந்துள்ளது.

கேப்டன் இறந்தும் எங்கேயும் வெளியில் செல்லாமல் இருந்தேன். கூட்டணி அமைந்த உடன் எடப்பாடியார் அவர்கள் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார். 35 தொகுதிகளிலும் இரட்டை இலைக்கும், ஐந்து தொகுதிகளில் கொட்டுமுரசு சின்னத்திற்கும் வாக்கு சேர்த்து வருகிறேன். தேர்தல் இறுதி பிரச்சாரத்தில் கேப்டன் பிறந்த ஊரில் மதுரை மண்ணில் டாக்டர் சரவணன் அவர்களுக்கு, மதுரையின் மருமகளாக உங்க வீட்டு பெண்ணாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன்.

இன்று திமுகவின் உதயநிதி முதல் கதிர்ஆனந்த் வரை என எல்லோரும் பெண்களை வாக்காளர்களை இழிவாக பேசுகின்றனர். டாக்டர் சரவணன் வெற்றி பெற்றால் மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், விவசாயிகள் விலை பொருட்கள் வணிகப் பொருட்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், மதுரையில் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும், பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும், மதுரையில் தொழில் நுட்பப் பூங்கா அமைத்து படித்துப் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

ட்விட்டர் டெலிபோன்லையும் ஏற்கனவே இருந்த எம்பி மாதிரி அரசியல் செய்யாமல் களத்திற்கு வந்து உங்களுக்காக சேவை செய்து இந்த தொகுதி மக்களை முன்னேற்றுவார். கொரோனா காலகட்டத்தில் எல்லா மக்களுக்கும் இலவசமாக மருத்துவ சேவை செய்தார். மருத்துவ உதவி, குழந்தைகளுக்கு இருதயம் சிகிச்சை,
மாற்றுத்திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சை, கல்வி கட்டண உதவி போன்ற உதவிகளை சொந்த செலவில் செய்பவர் டாக்டர் சரவணன்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, மணல் கடத்தல் வழக்கு தொடர்ந்து, மதுரையில் மணல் கொள்ளையை முற்றிலமாக தடுத்தவர் டாக்டர் சரவணன். லாட்டரி புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. 509 கோடி ரூபாயை நன்கொடையாக மறைமுக ஊழலாக பெற்ற திமுக. ஊழலைப் பற்றி பேசும் வெங்கடேசன், லாட்டரி அதிகரிப்பை பற்றி ஏன் பேச மறுக்கிறார். உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கூட்டணியில் இருப்பதால் வாய் மூடி மௌனியாக இருக்கிறார். கூட்டணி கட்சியாக இருந்தாலும் சுட்டிக் காட்ட வேண்டும்.

ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க தைரியம் இருக்கா..? இன்று திமுகவின் உதயநிதி முதல் கதிர்ஆனந்த் வரை என எல்லோரும் பெண்களை வாக்காளர்களை இழிவாக பேசுகின்றனர். வெங்கடேசன் அவர்கள் எம்பி நிதியில் 17 கோடி ரூபாயை 4.24 கோடியை மட்டும் பயன்படுத்தி 22 கோடி செலவு செய்ததாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். நாங்கள் கேட்கிற கேள்விக்கு வெங்கடேசன் பதில் சொல்ல வேட்பாளர் சார்பாக தயாரா என்று கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார்.

பரப்புரைக்கூட்டத்தில் ஆண் குழந்தை ஒன்றிற்கு விஜய ராமச்சந்திரன் என பிரேமலதா விஜயகாந்த் பெயர் சூட்டினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 301

    0

    0