மணிப்பூருக்காக நாடாளுமன்றத்தை முடக்கத் தெரிந்த திமுக… நீட் ரத்துக்காக செய்யாதது ஏன்..? CM ஸ்டாலினுக்கு தேமுதிக கேள்வி..!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 8:59 pm

நீட் தேர்வு ரத்துக்காக நாடாளுமன்றத்தில் முடக்காதது ஏன்..? என்று திமுகவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தந்தையும் மறுநாள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவன் மற்றும் அவரது தந்தையின் தற்கொலைக்கு நீட் தேர்வு விலக்குக்கான மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாததே காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மாணவர்களுக்கு திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பதிலுக்கு குற்றம்சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்த திமுக, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பாதது ஏன்..? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் #நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சி அமைத்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காதது ஏன்? மணிப்பூர் கலவரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கம் திமுக எம்பிக்கள், நீட் தேர்வு குறித்து பேசாதது ஏன்?,” எனக் கூறினார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!