தெரிஞ்சு தான் பேசுறாரா..?… தமிழ் மொழியை வைத்து அரசியல் தான் பண்ணுறாங்க ; சீமானுக்கு விஜய பிரபாகரன் பதிலடி!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 6:24 pm

கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் என்று சீமான் பேச்சுக்கு தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும், கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் அவர்கள் கொட்டுமுரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்பதைப் போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது.

மேலும், ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும், தமிழை மட்டுமே கற்றுக் கொண்டால், தமிழகத்தில் மட்டுமே இருக்க முடியும்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவில்லை, எனக் கூறினார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!