கோவையில் திமுக போட்டியா..? கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய திமுக.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..?
Author: Babu Lakshmanan12 மார்ச் 2024, 11:48 காலை
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை திமுக வெற்றிகரமாக முடித்து விட்டது. காங்கிரசுககு 9 சீட்டுகளும், விசிகவுக்கு 2 சீட்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகளும், இந்தியன் முஸ்லீம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், மதுரை தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது.
இதன் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கோவை தொகுதியில் இருந்து விலகி, திண்டுக்கல்லில் இந்த முறை போட்டியிடுகிறது. இதன்மூலம், கோவையில் திமுக நேரடியாக களமிறங்க இருப்பதாக தெரிகிறது.
1
0