சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளின் செயல்களால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அமைத்தும், அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியாக வெளியாக கூட்டணி கட்சிகள் அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றன.
திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று திருமாவின் இருமாப்பு திமுக தலைவர் ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. தற்போதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அவர் அதே நம்பிக்கையில்தான் கூட்டணி கட்சிகளிடம் காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டது விசிக.
அதோடு, தஞ்சை நகராட்சி தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி முறித்தது திமுகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கூட்டணி கட்சிகள் எடுத்திருப்பது பெரும் பின்னடைவு என்று திமுக வட்டாரங்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்களின் ஆதரவுகளை பெற்று, முழு வெற்றியைப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் தீட்டி வருகிறார். ஆனால், நெல்லை மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில், அக்கட்சி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எம்சி கார்த்திக் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது திமுகவுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கூறியிருப்பது அதிமுக, பாஜகவுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர் கூட்டணி கட்சியினர். அதுமட்டுமில்லாமல், கரூரில் திமுக – காங்கிரஸ் மோதல் வெளிப்படையாக இருந்து வருவதால், அங்கும் காங்கிரஸ் தடபுடலான முடிவை எடுத்தால், அனைத்து திட்டங்களும் பாழாய் போய்விடுமோ என்ற எண்ணம் திமுக தலைமை இடத்தில் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.