மேயர், துணை மேயர் பதவிகளில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு : காங்கிரஸுக்கு ஒரு மேயர் பதவி ஒதுக்கீடு..!!!

Author: Babu Lakshmanan
3 March 2022, 12:33 pm

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது, இதற்கான முடிவுகள் 22ம் தேதி வெளியாகியது. இதில், பெரும்பாலான இடங்களில் திமுகவே கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்தது திமுக.

Image

இதேபோல, திமுக கூட்டணியில் கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Image

சேலம், காஞ்சியில் துணை மேயர் பதவியும், 6 நகராட்சி தலைவர் பதவியும், 9 நகராட்சி துணைத் தலைவர் பதவியும், 8 பேருராட்சி தலைவர், 11 துணைத் தலைவர் பதவியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

Image

இதேபோல, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Image
Image
Image
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1495

    0

    0