மறைமுக தேர்தல் : வேட்பாளர்களை வெளியிட்டது விசிக… கடலூர் துணை மேயர் வேட்பாளர் யாரு தெரியுமா..?
Author: Babu Lakshmanan3 March 2022, 2:57 pm
திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களின் பட்டியலை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது, இதற்கான முடிவுகள் 22ம் தேதி வெளியாகியது. இதில், பெரும்பாலான இடங்களில் திமுகவே கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்தது திமுக.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன். கடலூர் துணை மேயர் வேட்பாளராக ப.தாமரைச் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம் சேர்மன் வேட்பாளர் சுமதி சிவக்குமார்
நெல்லிக்குப்பம் சேர்மன் வேட்பாளர் கிரிஜா திருமாறன்
திண்டிவனம் துணை சேர்மன் வேட்பாளர் ராஜலட்சுமி
பெரியகுளம் துணை சேர்மன் வேட்பாளர் பிரேம்குமார்
ராணிப்பேட்டை துணை சேர்மன் வேட்பாளர் ரமேஷ்கண்ணா
பென்னாடம் பேரூராட்சி தலைவர் வேட்பாளர் அமுதலட்சுமி
காட்லாடம்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளர் குமார்
மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் வேட்பாளர் சின்னவேடி