திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பர்னால் வாங்க ஓடறாங்க : பாஜக பிரமுகர் குஷ்பு கிண்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 5:55 pm

நேற்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்துள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 300க்கும் அதிக இடங்களில் ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாஜக கட்சி மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தான் பாஜக கட்சியை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் கட்சியினரும், திராவிடர்களும் ஜெலுசில் மற்றும் பர்னோல் வாங்க ஓடுவதை பார்க்கும்போது அதிகமாக சிரிப்பு வருகிறது” என்றார்.

அதாது எக்ஸிட் போல் ரிசல்ட்டில் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பல கருத்து கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இதனால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் வயிற்றெறிச்சல் படலாம் என்பதை மறைமுகமாக அவர் கிண்டல் செய்துள்ளார். மேலும் அவரது பதிவில் சிரிக்கும் இமோஜிக்களை பயன்படுத்தியுள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 409

    0

    0