‘திமுகவுக்கும், எங்களுக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கு’… ஒரே போடாக போட்ட கேஎஸ் அழகிரி!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 11:07 am

சென்னை: திமுகவுக்கும் எங்களுக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன் உள்பட 6 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்துள்ளது.

இந்த நிலையில், திமுகவுக்கும் எங்களுக்கும் பல கருத்து வேறுபாடுகள் உண்டு என்றும், கூட்டணி வேறு, கொள்கை வேறு என காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் பேசியதாவது :- எராளமான கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்?. இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜிவ் கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?.

திமுகவுக்கும் எங்களுக்கும் பல கருத்து வேறுபாடு உண்டு. ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தவறு. கூட்டணி வேறு, கொள்கை வேறு: திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது, எனக் கூறினார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!