திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியீடு ; அண்ணாமலையின் செயலுக்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 1:04 pm

திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேருக்கு தான் காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஆனால் நாங்கள் தான் அதை செய்கிறோம். காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம். காவிரி தெற்கு வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம். கிணற்றை வெட்டுகிறோம். ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம். காவிரி குண்டாறும் விரைவில் வரும்.

பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டாண்ட், என்று கூறினார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!