திமுகவின் ஊழல்களை சுட்டிக்காட்டுவதால் பாஜகவுக்கான ஆதரவு பெருகுகிறது : மத்திய இணை அமைச்சர் முரளிதரன்..!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 10:39 am

திமுகவின் ஊழல்களை சுட்டிக்காட்டியும், குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும் வருவதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி பிரச்சார சபா விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்த வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேசியதாவது :- கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரேத்தேர்தல் பற்றி நாடு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

அப்போது, சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர். “திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும் அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திமுகவின் ஊழல்களை மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்க்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது,” என்றார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 636

    0

    0