‘கரங்களை வெட்டி எடுப்பேன்’… கொ.ம.தே.க. வேட்பாளரின் சாதிவெறி பேச்சு… திடீரென கிளம்பிய எதிர்ப்பால் நெருக்கடியில் திமுக…!!

Author: Babu Lakshmanan
19 மார்ச் 2024, 6:16 மணி
Quick Share

சென்னை ; சாதி மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியவரை வேட்பாளராக அறிவிக்கலாமா..? என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் கொ.ம.தே.கட்சியே இந்தத் தொகுதியில் போட்டியிட்ட போது, ஏகேபி சின்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.

இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதனால், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

ஆனால், சூரிய மூர்த்தியை வேட்பாளராக அறிவித்ததற்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்குக் காரணம் சூரியமூர்த்தி, ஜாதி ஆணவக் கொலையை ஆதரித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது :- தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. அப்படி வருமானால் அவர்களை மட்டுமல்லாது, அந்த இளைஞர்களின் தாயையும் சேர்த்து கொன்று விடுவோம் என பேசி இருக்கிறார்.

தங்கள் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் குறிவைத்து தங்கள் சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள், இதனையெல்லாம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

கொலை செய்ய அஞ்சமாட்டோம், அதன் பிறகு சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம்” என பேசியிருக்கிறார். அவர் பேசிய இந்த வீடியோவை தற்போது வைரலாக்கியதுடன், அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுகவினரே போர்க்கொடி தூக்கியிருப்பதால், திட்டமிட்டபடி வெற்றி கிடைக்குமா..? என்ற அச்சம் திமுக தலைமையிடம் எழுந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 214

    1

    0