திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அமைச்சரின் மகன் உள்பட புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு ; செந்தில் குமாருக்கு வாய்ப்பு மறுப்பு

Author: Babu Lakshmanan
20 March 2024, 11:11 am

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் போக, எஞ்சியுள்ள 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

வடசென்னை – கலாநிதி வீராசாமி
மத்திய சென்னை – தயாநிதி மாறன்
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர் – டிஆர் பாலு
அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
வேலூர் – கதிர் ஆனந்த்
தருமபுரி – ஆ.மணி
தூத்துக்குடி – கனிமொழி
தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
கள்ளக்குறிச்சி -மலையரசன்
நீலகிரி – ஆ.ராசா
தேனி – தங்கதமிழ்ச்செல்வன்
திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை
ஆரணி – தரணி வேந்தன்
சேலம் – டிஎம் செல்வகணபதி
கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
ஈரோடு – பிரகாஷ்
காஞ்சிபுரம் – செல்வம்
தஞ்சாவூர் – முரசொலி
பெரம்பலூர் – அருண்நேரு

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ