திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 5:21 pm

“உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தந்து உயர்கல்வி படிப்பவர்களுக்கு மகத்தான சாதனையை முதல்வர் செய்து வருவதாக அமைச்சர் மாசு புகழாரம்….”

“படித்தவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, ஜாதி சண்டை இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெருமிதம்….”

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திமுக பொறியாளர் அணி சார்பில் அனைத்து மண்டலங்களிலும் பேச்சுப் போட்டியில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது…

இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு, தலைமை நிலைய அலுவ­ல­கச் செய­லா­ளர் பூச்சி முருகன், பொறியாளர் அணி மாநில செயலாளர் எஸ்.கே.பி. கருணா மற்றும் பொறியாளர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது… உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது….உலகில் வேறு எந்த தலைவருக்கும் செய்யாத சாதனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார்….திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது…

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்ளது…கலைஞர் நூலகம் தென் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நூலகமாக உள்ளது….

ஏறு தழுவுதல் அரங்கம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக உள்ளது…திமுகவில் உள்ள 23 அணிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது… இந்தியாவில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழ்நாடு, இந்தியாவில் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலமும் தமிழ்நாடு….

6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்…உயர் கல்வி மாணவர்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மாத மாதம் ஆயிரம் ரூபாயும் 1000 முதல்வர் தந்து வருகிறார்….

உயர்கல்வியில் படிப்பவர்களுக்கு மகத்தான சாதனையை முதல்வரி செய்து வருகிறார்…நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 28 லட்ச மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்…

ஒரு மனிதனின் வரலாற்றைச், சாதனைகளை, செயல்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வருகிறது என்றால் உலக அளவில் அது கலைஞருக்கு மட்டுமே, கலைஞரே மிகப்பெரிய சாதனையாளர்….

கின்னஸ் கலைஞர் என்ற புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், இந்த மாத இறுதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த புத்தகம் வெளிவர உள்ளது…

எடுத்த காரியத்தை முடிக்கும் வல்லமை மிக்க தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் என்று கூறினார்…

தொடர்ந்து விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்…. திமுக ஜாதி கட்சி இல்லை, அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதியினரும், அனைவரையும் உள்ளடக்கிய கட்சி திமுக…

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்தினரும் விளையாட்டுத்துறையில் தம் பிள்ளைகள் வரவேண்டும் என்று தற்போது எண்ணுகிறார்கள்…. கலைஞர் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளார் குடும்பத்தின் உறுப்பினராக உள்ளார், இக்கட்டான நேரத்தில் பலருக்கு உதவி வருவது கலைஞர் காப்பீடு திட்டம்…

கலைஞரின் கனவு திட்டத்தை தான் மோடி தற்பொழுது செயல்படுத்தி விடுகிறார், கலைஞர் கொண்டு வந்த குடிசை மாற்று வாரியத் திட்டத்தை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் இருக்ககூடாது என இந்தியா முழுக்க குடியிருப்பு திட்டமாக கொண்டு வந்தார்….

தமிழ் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களை படிக்க வைத்தவர் கலைஞர், இன்று தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலம்… குலத் தொழிலை சங்கீகள் படிக்க சொல்வார்கள், நாம் தமிழையும் படி ஆங்கிலத்தையும் படி நீ மட்டும் உயரக்கூடாது உன்னை சுற்றி இருப்பவர்கள் உயர வேண்டும் தமிழ்நாடு உயர வேண்டும் என்று கூறி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வருகிறார்….படித்தவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, ஜாதி சண்டை இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதம் தெரிவித்தார்….

பூச்சி முருகன் பேசியது….அரசியல்வாதி திரைத்துறையினருக்கு இன்று உடற்பயிற்சி முக்கியமாக உள்ளது…கலைஞர் புகழ் இன்று உலகம் முழுக்க சென்றுள்ளது, நமக்கு தாயாக தந்தையாக இருந்தவர் கலைஞர் என்றார்…

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!