திமுக கவுன்சிலரின் குடும்ப சொத்து பிரச்சனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 17வது வார்டு திமுக கவுன்சிலர் இளங்கோவன். சொத்து தொடர்பாக இவரது குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்தது. இதனால், அவரது உறவினர் வீட்டு பெண்களை வீடுபுகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இவர்களது குடும்பப் பிரச்சனையை சமரசம் பேச வந்த பாலமுருகன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய நபர்களை தேடி வந்த நிலையில், திமுக கவுன்சிலர் இளங்கோவன் அண்ணன் தயாளன் என்பவரது மகன் வினோத்குமார், ராஜ்கிரண் ஆகிய இருவரை கைது செய்து பொன்னேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கவுன்சிலரின் குடும்ப சொத்து பிரச்சனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
பொன்னேரி 17வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சனையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர் இதில் ஈடுபட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர்.
காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது. தங்கள் கட்சியினர், தமிழகத்தை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் மௌனமாக இருப்பீர்கள், திரு முதலமைச்சர் ஸ்டாலின்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.