திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் புகார்… அதிமுக, பாஜக கவுன்சிலர்களுடன்
சேர்ந்து திமுக கவுன்சிலரும் உள்ளிருப்பு போராட்டம்..!!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 9:09 am

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல் செய்ததாக பாஜக, அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள புத்தளம் பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த சத்தியவதி இருந்து வருகிறார். இவர், பணிகளைச் செய்யாமலேயே போலி ஆவணம் தயாரித்து, கோடிக்கணக்கில் அரசு பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், சத்தியவதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் எதிர்கட்சி கவுன்சிலர்களுடன், திமுக கவுன்சிலரும் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசிடம் இருந்து வந்த ரூ.50 லட்ச நிதியை சத்தியவதி கணக்கில் கொண்டு வரவில்லை என்று திமுக கவுன்சிலரே குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ