‘திமுக ஜெயிச்சதால் வந்த தரித்திரமா..? மக்கள் நம்மளை அடித்து விரட்டப் போகிறார்கள்’… திமுக கவுன்சிலர் வெளியிட்ட ஆடியோ..!!

Author: Babu Lakshmanan
5 September 2022, 9:04 pm

தூத்துக்குடி ; திருச்செந்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, 3வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் என்று புலம்பிய வார்டு கவுன்சிலர் ரூபன், ”இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்க வந்த தரித்திரமா என்று தெரியவில்லை. அனைத்து பொதுமக்களும் குடிநீர் கிடைக்கவில்லை என்று திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க, ஆனால் குடிநீர் கொடுக்கவும் முடியவில்லை.

நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புது நகராட்சி கட்டடம், புது மார்க்கெட் கட்டடம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுங்க. இல்லையென்றால் ஒரு நாள் நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும், என்று கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!