ஏமாற்றிய திமுக கவுன்சிலர்.. எங்க சொன்னாலும் நடவடிக்கை இல்ல : குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 10:02 pm

திமுக கவுன்சிலர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கோவையை சேர்ந்த திராவிடன் பன்னீர் செல்வம் என்பவர் கோவை அவினாசி சாலை ஜென்னி club முன்பு திடிரென தனது குடும்பத்தினருடன் சாலை மறியல் செய்தார்.

எங்கு சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி மறியல் செய்வதாக கூறினார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் குடும்பத்தை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொறுப்பில் உள்ள திமுகவினர் எந்த தவறும் செய்ய கூடாது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடையில் கூறிய நிலையில், தொடர்ச்சியாக திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுதிதியுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?