தனித்து போட்டியிடுகிறதா மநீம? கமலுக்கு அழைப்பு விடுக்காத திமுக : காரணத்தை சொல்லும் அமைச்சர் ஐ பெரியசாமி!!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2024, 8:01 pm
தனித்து போட்டியிடுகிறதா மநீம? கமலுக்கு அழைப்பு விடுக்காத திமுக : காரணத்தை சொல்லும் அமைச்சர் ஐ பெரியசாமி!!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும். அதற்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பின்னர் அவரிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளீர்களா? அவர் கூட்டணியில் இருக்கிறாரா? என்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி அதுபற்றி முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.