நான் அப்படி தா வசூல் செய்வேன் : பானிபூரி வியாபாரியை மிரட்டி மாமூல் கேட்கும் திமுக பிரமுகர்… வைரலாகும் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 10:09 pm

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் ஆனந்தன் சாலையோர வியாபாரிகளிடம் தினமும் 50 ரூபாய் 100 ரூபாய் தரவேண்டும் என்று அடாவடி வசூல் செய்து வருகிறார்.

இவ்வாறு வசூல் செய்வது தவறு என்று அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் அவரிடம் தொலைபேசி வழியாக கூறினார்.

அதற்கு நேரில் வந்து பதில் சொல்கிறேன் என்று நேரில் வந்து அச்சில் ஏற்றப்படா முடியாத வகையில் கெட்ட கெட்ட வார்த்தையில் ஆட்டோ டிரைவரை பேசுகிறார்.

மேலும் தான் தினமும் மாநகராட்சியின் சுகாதார பணியாளர்களுக்கு செலவு செய்வதாகவும் அதற்கு தினமும் ருபாய் 10,000 தேவைப்படுவதாகவும் அதற்காக யாரிடம் வேண்டுமானாலும் நான் வசூல் செய்வேன் யாரும் என்னை கேட்க கூடாது என்று கெட்ட கெட்ட வார்த்தையில் பேசுகிறார்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைதியாக இருந்த இடுவம்பாளையத்தில் இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கிறது என வேதனை தெரிவித்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!