‘நீ என்ன பெரிய புடு***’… ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை அடிக்க பாய்ந்த திமுக பிரமுகர்.. சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 2:34 pm

நெல்லை அருகே உவரி மீனவர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கச் சென்ற அதிகாரிகளை ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் ஆபாசமாக திட்டி அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உவரி மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இது தொடர்பான விசாரணையின் போது, தடை செய்யப்பட்ட சுருக்குடி வலைகள் பயன்படுத்த கண்காணித்து நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் தலைமையில் அதிகாரிகள் உவரி கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்ததற்காக சென்றனர். அப்போது, அங்கு அதிகாரிகளை வழிமறித்த திமக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மீனவர் பிரச்சனையில் நீங்க தலையிட என்ன அதிகாரம் இருக்கு..? என்று கேள்வி எழுப்பிய அந்தோணிராய், அதிகாரிகளிடம் சீரிப் பாய்ந்தவாறே பேசிக் கொண்டிருந்தார். இதனால், கடுப்பாகி போன அதிகாரிகள், எங்களை தாண்டி எப்படி சுருக்குடி வலைகளை எடுத்துச் செல்வீர்கள் என்று பார்க்கிறோம் என பதில் சவடால் விட்டனர்.

இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற திமுக பிரமுகர் அந்தோணி ராய், தகாத வார்த்தைகளில் திட்டி பேசியதுடன், அதிகாரிகளை அடிக்கவும் பாய்ந்தார்.

இதனை எல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த போலீஸார், திமுக பிரமுகரை சமாதானப் படுத்தி வைத்து மட்டுமே அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் மிரட்டல் விடுத்ததாக, அதிகாரிகள் உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதிகாரிகளை அவர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் திமுக பிரமுகர் பேசியது, பிற அதிகாரிகளையும் சற்று அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 426

    0

    0