‘நான் சாகப் போறேன்’… திமுக நிர்வாகி மிரட்டியதால் திமுக வார்டு செயலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி… பரபரப்பு வீடியோ வெளியீடு..!

Author: Babu Lakshmanan
17 May 2022, 1:01 pm

கரூர் : திமுக நிர்வாகி மிரட்டியதால் அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், வீடியோ வெளியிட்டு விட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி தவுட்டுப்பாளையும் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசன் இளங்கோவன் (45) என்பவர் இப்பகுதியில் 4-வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இவருக்கு ஒரு மனைவி, 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் நேற்றிரவு மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார். அதில் “என் தற்கொலைக்கு என்னை மிரட்டிய நொய்யல் சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான்காரணம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அவருடன் தனது தாய்மாமன், வீரமணி, சின்னசாமி கருணாநிதிதான் காரணம், எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை தற்போது அவரது செல்போனில் வாட்ஸ் ஸ்டேடஸ் ஆகவும் வைத்துள்ளார். தற்போது தற்கொலைக்கு முயற்சித்த இளங்கோவன் மிகவும் ஆபத்தான நிலையில், கோயம்பூத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

அங்கு காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் திரும்ப கரூர் அரசு மருத்துவமனைக்கே கொண்டு வரப்படுகிறார்.

தற்கொலைக்கு முயற்சித்திருக்கும் இளங்கோ தனது வீடியோவில் கூறியுள்ள நொய்யல் சேகர் என்பவர் தற்போதைய கரூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், புகழூர் நகராட்சி தலைவராகவும் உள்ளார். திமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் மிரட்டல்களால் தற்கொலை செய்து கொள்பவர்கள எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!