பழங்குடியின பெண்ணை செருப்பால் அடித்து விரட்டும் திமுக நிர்வாகியின் கணவர்.. வீடியோ வெளியிட்டு கொந்தளித்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 2:18 pm

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சரும், திமுகவினரும் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

மேலும் சமூக நீதி சமூகநீதி என கூக்குரலிட்டும் வருகின்றனர். ஆனால் பழங்குடியின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்கதையாக தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதில், தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி தீபலட்சுமி அவர்களின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக திமுகவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள்.

மேலும் இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பட்டியல், பழங்குடியின சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!