அண்ணாமலை வெளியிட்ட DMK FILES : கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்.. கடுப்பான கனிமொழி!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2023, 5:34 pm
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தனது ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். திமுக ஊழல் பட்டியல் பாகம் ஒன்றோடு முடியப்போவதில்லை, தமிழ்நாட்டில் எந்தக் கட்சியெல்லாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலையும் வெளிக்கொண்டு வரப்போகிறேன் எனத் தெரிவித்தார் அண்ணாமலை.
நீங்கள் நினைப்பீர்கள் இவர் ஒரு கட்சியை மட்டும் எதிர்ப்பார் என்று, அனைத்தையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளிக்கொண்டு வருவேன். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் அனைவரையும் மொத்தமாக எதிர்ப்போம். எதிர்க்கக்கூடாது என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான் என ஆவேசமாகப் பேசினார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கனிமொழி எம்பி யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை.