கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி அதிகப்படுத்தி கொடுத்த திமுக : பூரிப்பில் காங்கிரஸ்.. இழுபறிக்கு வைத்த முற்றுப்புள்ளி!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2024, 9:15 pm
கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி அதிகப்படுத்தி கொடுத்த திமுக : பூரிப்பில் காங்கிரஸ்.. இழுபறிக்கு வைத்த முற்றுப்புள்ளி!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக., அதிமுக., காங்கிரஸ், பாஜக., பாமக., தேமுதிக., அமமுக. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் .காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகள் , புதுச்சேரியில் 1 தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.