வாக்காளர்களுக்கு நாமத்தை போட்டுவிட்டது திமுக… தமிழகத்திற்கு கடந்த 9 மாதம் இருண்டகாலம் : எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
10 February 2022, 4:27 pm

சேலம் : சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில், வாழப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றியும் பட்டியலிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது :- திமுகவின் 9 மாத ஆட்சி இருண்ட காலம். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீட் தேர்வு ரகசியத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஏன் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்..? கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்கும் மக்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை போலீசாரே மிரட்டுகின்றனர். கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும். அப்போது, ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள், எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1159

    0

    0