ஒன்றிய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து திராவிட மாடல் கழக அரசு உங்களோடு நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து நடத்தும் உலக மீனவர் நாள் வெள்ளி விழா கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்றது.
விழாவில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் பங்கு தந்தையர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கழக நிகழ்ச்சிக்காக வர இருந்ததை தெரிந்து கொண்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் என்னை இங்கு வர வைத்துள்ளனர்.
முட்டம் கடற்கரை பகுதிக்கு ஏற்கனவே வந்துள்ளேன், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். இயற்கையோடு வாழும் கடலோடிகளோடு மீனவர் தினத்தில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மீனவர்கள் அதிகமாக இருக்கும் தொகுதி, இதனால் தான் நான் உங்கள் வீட்டு பிள்ளை என கூறுகிறேன்.
நாட்டு படகுகளை எந்திர படகுகளாக்கும் திட்டத்தில் 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எனவும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் கணவனை இழந்த மனைவிகளுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளதை விரைவில் நிறைவேற்றப்படும்.
கடல் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். ஒன்றிய அரசு மீனவர்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து திராவிட மாடல் கழக அரசு உங்களோடு நிற்கும் என பேசினார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.