அண்ணாமலை கைக்காட்டிய அமைச்சரை நீக்கும் திமுக அரசு? பொறியில் சிக்கிய சீனியர்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 11:12 am

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து பல்வேறு முறைகேடுகள், குற்றச்சம்பவங்கள் அதிகரித்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.

இதையடுத்து திமுக அரசு தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நல திட்டங்களை முன்னெடுத்தது. காலை சிற்றுண்டி, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் என ஏராளமான திட்டங்கள் மக்களிடையே சேர்ந்தது.

குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வேறு எந்த மாநிலமும் அமல்படுத்த முடியாத நிலையில் திமுக அதை அமல்படுத்தி சாதித்துள்ளது.

இதனிடையே பல்வேறு புகார்கள் அமைச்சர் நாசர் மீது எழுந்த நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ளார். அவர் புறப்படும் முன்பு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், உதயநிதி துணை முதவ்ராவார் என தகவல்கள் வெளியாகின.

தற்போது அது உண்மை என நிரூபிக்கும் வகையில், அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மூத்த அமைச்சரான காந்தி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என கூறப்படுகிறது.

ஏனென்றால், கைத்தறி துறை அமைச்சர் காந்தி மீது தொடர்ச்சியாக அண்ணாமலை ஊழல் புகார் கூறி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேஷ்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் வரை தள்ளிப் போவதாகவும், இதற்கு காரணமான அமைச்சர் மீது தமிழக பாஜக சார்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் அமைச்சர் காந்தியின் ஊழல் குறித்து அண்ணாமலை தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் அமைச்சரை நீக்க முதலமைச்சர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு அமைச்சரான மனோ தங்கராஜ் மற்றும் இன்னொரு அமைச்சரின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

யார் அந்த அமைச்சர்கள், புதியவர்கள் யாருக்கு வாய்ப்பு என்பது இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் அறிவிப்பில் தெரிந்து கொள்வோம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 210

    0

    0