திமுக கதாநாயகி.. அதிமுக சூப்பர் ஹீரோ : தேர்தல் அறிக்கையில் மாஸ் காட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 4 முக்கிய குழுக்களை அறிவித்தது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன் , பா. வளர்மதி, செம்மலை பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதில் “அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் கூட்டணி கூட்டணி குறித்து தெரிய வரும், தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கி உள்ளது. மக்களின் எண்ணம் மக்களின் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும்.
தினகரன் ஒரு தனிமரம் அதிமுக ஒரு தோப்பு, அனைவரும் நிழல் தரும் ஒரு ஆலமரம், அவர்கள் கூறும் கருத்துக்களை பெரிதாக பார்ப்பதில்லை. 2021 ஆம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கை பார்த்த மக்கள் ஏமாந்து விட்டன. இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு தேர்தல் அறிக்கையாகவும், மாநில உரிமைகளை பேணி காக்கும் ஒரு தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.