இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. அதுக்கு இதுதான் சாட்சி : ஆதாரங்களுடன் புட்டு வைத்த அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 10:01 pm
மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத் தேர்தல் பொறுத்தவரை திமுகவுக்கு தோல்வி பயம் விட்டதாகவும், அந்த தொகுதி திமுக மாவட்ட செயலாளரே அதிருப்தியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் பலப்பரிச்சைக்கான தேர்தல் இல்லை என்றும் வரும் 2024 ம் ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் பாஜகவுக்கு பலப்பரிச்சையான தேர்தல் என குறிப்பிட்டார்.
ஈரோடு இடைத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணியில் அதிமுகவே பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாலும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்க கூடாது,
திமுகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், என்ன தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவர தான் போகிறது என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.