என்னைப் பார்த்து திமுகவுக்கு பயம்.. மீண்டும் குண்டர் சட்டம் குறித்து சவுக்கு சங்கர் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 4:14 pm

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக இன்று மீண்டும் கோவை நீதிமன்றம் அழைத்து வரபட்ட சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது.அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது.

அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசியபடி சவுக்கு சங்கர் நீதிமன்றத்திற்க்குள் சென்றார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…