திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை மதிக்காத கரூர் திமுகவினர்,கூட்டணி தர்மத்தை மீறிய திமுக கவுன்சிலர், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது புலியூர் பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில்,ஸ்டாலின் உத்தரவை மதிக்காமல் திமுகவினர் அபகரித்தாக புகார் எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 13 வார்டுகள் திமுக கூட்டணியும் ஒரு வார்டு பிஜேபியும், ஒரு வார்டு சுயேட்சியும் வெற்றி பெற்றது.
இதில் திமுக கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார்,
அப்போது பதவியேற்பு விழா நடைபெற தயாராக இருந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் யாரும் முன்மொழிய தயாராக இல்லாததால் கலா ராணி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் 3வது வார்டு திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு முன் தாக்கல் செய்தார். தொடர்ந்து புலியூர் பேரூராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல் இருந்ததால், அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியில் யாராக இருந்தாலும் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டார் அந்த அறிவிப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஸ்வரி தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மூன்று முறை இதற்கான தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது திமுகவினர் யாரும் அந்த தேர்தல் நேரத்தில் வராமல் புறக்கணித்தனர்.
இதற்கு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பிரதிநிதியை காரணம் எனவும் அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வேட்பாளர் என கலாராணி குற்றம் சாட்டினார்.
மூன்று முறை தேர்தல் நடத்த அறிவித்திருந்த நிலையில் திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கலாரணி-க்கு ஒத்துழைப்பு தரவில்லை,
இந்த நிலையில் இன்று தேர்தல் என்று தேர்தல் அதிகாரி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் நிராகரித்துவிட்டு திமுகவை சேர்ந்த கவுன்சிலர் புவனேஸ்வரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை தற்போது மீண்டும் திமுக தலைவரால் அறிவிக்கப்பட்டு பதவியை ராஜினாமா செய்த புவனேஸ்வரியை மீண்டும் அதே தலைவர் பதவிக்கு இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
திமுக தலைவரின் அறிவிப்பு கரூர் மாவட்டத்தில் கேட்பதில்லை,யாரோ ஒருவர் அதிகாரம் படைத்தவர் பேச்சைக் கேட்டு தற்போது மீண்டும் தலைவர் பதவிக்கு புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இது குறித்து திமுக நிர்வாகத்திடம் முறையிடுவோம் என்றும் தெரிவித்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.