பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்.
புதுச்சேரி சார்பில் மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் தமிழகம் சார்பில் அணி தேர்வு செய்யப்படாததற்கு பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு தான் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு நம் மாணவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.