அதிமுக எடுத்த அதிரடி முடிவை கண்டு திமுக மிரண்டு போயுள்ளது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 2:14 pm

அதிமுக எடுத்த அதிரடி முடிவை கண்டு திமுக மிரண்டு போயுள்ளது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பலிகடா ஆகப்போவது தெரியாமல் அதனை ஆதரித்துள்ளது என்று கூறி உள்ளார்.

இதற்கு பதிலளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும். நேர விரயம், மனித சக்தி வீணடிப்பது இதையெல்லாம் கருத்தில் கொண்டே முடிவை எடுத்துள்ளனர்.

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. 1982-ல் இருந்தே ஒரே தேர்தல் கோஷம் இருந்து வருகிறது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு அனுமதி அளித்துள்ளோம். அந்த வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்தோம். இதை வரவேற்பதில் தி.மு.க. வுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…