இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய திமுக வழக்கறிஞர்.. நிலப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய போது ஆத்திரம்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 5:24 pm

இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய நபரை திமுக வழக்கறிஞர் மண்வெட்டி எடுத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

நெல்லை மாவட்டம் டவுன் மாதா கோவிலைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு நெல்லை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இப்படியிருக்கையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் சங்கர் கட்டிடப் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, சங்கரும், அவரது நண்பருமான திமுக வழக்கறிஞர் நவ்ஷாத் ஆகியோர் விக்னேஷை கண்மூடித்தணமாக தாக்கியுள்ளனர்.

இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது திமுக வழக்கறிஞர் நவ்ஷாத், மண்வெட்டி எடுத்து விக்னேஷை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..
  • Close menu