பாஜக ஊழல் பட்டியலை வெளியிட்டால் சந்தி சிரித்து விடும் : ஊழல் பற்றி பேச தகுதி இல்லாத கட்சி ; திமுக அமைச்சர் காட்டம்..!!
Author: Babu Lakshmanan14 April 2023, 4:58 pm
திமுக., வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் செயல் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் போது, பி.ஜே.பி., ஊழல் குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி எனவும், நீரவ் மோடி முதல் அதானி வரையிலும் பலருக்கு துணை போகும் கட்சி, பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை வைத்துக்கொண்டு இவர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதி அற்றவர்கள் எனக் கூறினார்.
திமுக வினரின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது மக்களின் எண்ணத்தை திசைதிருப்பும் செயல் என்றும், பா.ஜ.க., வின் ஊழல் பட்டியல் சந்தி சிரிக்கும் அளவிற்கு மக்களுக்கு தெரியும், என கூறினார்.