இப்படியே பேசுனா… அப்பறம் சொந்த ஊரையே தாண்ட முடியாது… அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 9:13 am

கடலூர் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களின் கிடுகிடு விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு அறிவித்தது.

Petrol Price - Updatenews360

இதைத் தொடர்ந்து, மத்திய அரசைப் போலவே, இன்னும் 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும், இல்லையேல், கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசுக்கு கெடு விதித்த அண்ணாமலைக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Annamalai Protest - Updatenews360

நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் நடந்த திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும்.

இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழக பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம், எனக் கூறினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 867

    0

    0