திமுக எம்எல்ஏ உதவியாளரை தாக்கிய அமைச்சர் நாசர் ; மேடையில் இருந்தவர்கள் ஷாக்.. வைரலாகும் வீடியோவால் அறிவாலயம் அப்செட்..!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 9:59 am

திமுக எம்எல்ஏவின் உதவியாளரை மேடையில் வைத்து அமைச்சர் நாசர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நாசர், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ் மொழி குறித்து அமைச்சர் நாசர் மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி எம்எல்ஏ உதவியாளரான சதீஷ், மேடையில் நகர்ந்து செல்லும் போது, தவறுதலாக கைபட்டு, மைக் கீழே விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பேசுவதை நிறுத்தி விட்டு, சதீஷை ஓங்கி அடித்தார். இதனால், மனமுடைந்த அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி விட்டார்.

மேடையில் பொறுமையிழந்து அமைச்சர் நாசர் செய்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிரும் எதிர்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள், அமைச்சர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளால் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருவதாக அவரே கூறியிருந்த நிலையில், அடுத்ததாக அமைச்சர் நாசரின் செயல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 540

    0

    0