3 மணி நேரம் எங்க காத்திருந்தா? யாரு பேட்டி கொடுத்தா? செய்தியாளரை மிரட்டிய திமுக அமைச்சர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 6:23 pm

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக காலை எட்டு மணிக்கு வரவழைக்கப்பட்ட இளைஞர்கள், ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சருக்காக காத்திருந்ததாக தெரிகிறது.

விழாவை அமைச்சர் காலை 9 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டடு இருந்த நிலையில், 11 மணிக்கு தான்‌ அமைச்சர் விழாவிற்கு வந்துள்ளார். இதனால் காலை 8 மணிக்கு அறையில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞர்கள் மூன்று மணி நேரமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை காரில் இருந்து இறங்கிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காரில் இருந்து இறங்கிய அமைச்சர் பெரியகருப்பன், 3 மணி நேரமாக எங்கயா காத்திருந்த, யாருயா பேட்டி கொடுத்தா என மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் ரவுடிசம் அதிகரித்து வருவதும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும் கண்கூடாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சரே செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி