சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைப்பதாக இருந்தது.
இதற்காக காலை எட்டு மணிக்கு வரவழைக்கப்பட்ட இளைஞர்கள், ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சருக்காக காத்திருந்ததாக தெரிகிறது.
விழாவை அமைச்சர் காலை 9 மணிக்கு தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டடு இருந்த நிலையில், 11 மணிக்கு தான் அமைச்சர் விழாவிற்கு வந்துள்ளார். இதனால் காலை 8 மணிக்கு அறையில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞர்கள் மூன்று மணி நேரமாக காத்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை காரில் இருந்து இறங்கிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காரில் இருந்து இறங்கிய அமைச்சர் பெரியகருப்பன், 3 மணி நேரமாக எங்கயா காத்திருந்த, யாருயா பேட்டி கொடுத்தா என மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பின் ரவுடிசம் அதிகரித்து வருவதும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும் கண்கூடாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சரே செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.