ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் அண்ணாமலை… சிறைக்கு போக தயாராகும் அமைச்சர்கள் : கேபி ராமலிங்கம் சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 9:27 am

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள் என அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் மல்லூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சட்டமன்றத் தேர்தலும் வருவது நிச்சயம். இதற்கு அண்மையில் ஆளுநர் உரையின் போது ஆளுங்கட்சியினர் நடந்து கொண்டது முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வாரிசு குரங்குகள். காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாடகை குரங்குகள். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அண்டர் கிரவுண்ட் வாடகை குரங்குகள். தமிழகத்தில் நல்லாட்சி தரக்கூடிய அருகதை உள்ள ஒரே கட்சி பாஜகதான் என மக்கள் நம்புவதால், அதனை நோக்கியே அனைவரும் பயணிக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்றவும், அதிகார துஷ்பிரயோகத்தை அகற்றவும், மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவரின் நடைப்பயணத்தின் போதே தமிழகத்தின் அமைச்சர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட போகிறார்கள். அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பாஜக மட்டுமே இருக்கும், எனவும் அவர் தெரிவித்தார்.

Annamalai - Updatenews360

இந்தக் கூட்டத்தில் பட்டியல் அணி மாநில தலைவர் பெரியசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 539

    0

    0