திமுக அமைச்சர் மருமகனுக்கு நெருக்கடி.. சட்டவிரோதமாக காப்புக்காட்டில் சாலை : ஆக்ஷனில் இறங்கிய வனத்துறை அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 5:59 pm

நீலகிரி மாவட்ட வனக்கோட்டம் கோத்தகிரி வன சரக பகுதியில் உள்ள கர்சன் எஸ்டேட் முதல் மேடநாடு எஸ்டேட் வாரத்தில் உள்ள சுமார் 4 கிலோமீட்டர் நீளம் 2.1 மீட்டர் அகலமும் கொண்ட காப்பு காட்டின் வழியே செல்லும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் முன் அனுமதி பெறாமல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் அறிவுறுத்தலின் பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் கோத்தகிரி வனசரக வனவர் தலைமையில் வன பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பணிகளை உடனடியாக நிறுத்தப்பட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மூன்று நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அமைச்சர் ராமச்சந்திரன் இதற்கு முன் வனத்துறை அமைச்சராக இருந்த நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமைச்சரின் மருமகன் தொண்ணன் சிவக்குமாரின் ஆளுமை அதிகரித்து காணபட்டிருந்தது. மேலும் சுற்றுலாத்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றமாகியுள்ள மதிவேந்தன் மிகவும் திறமையாகவும், சாதுர்யமாகவும் பணியாற்றி வருகிறார்.

உதாரணத்திற்கு சட்டசபையில், எதிர்கட்சி தலைவர் டேண்டீ குறித்து எழுப்பிய கேள்விக்கு புள்ளிவிவரங்களுடன் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் காப்பு காட்டில் சாலை அமைக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ளார். வனத்துறையும் தயங்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது அடுத்து என்ன நடக்கபோகிறது? என்கிற எதிர்பார்ப்பை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

  • Suchitra Vishal இரவில் விஷாலை வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்ட? சுசித்ராவை விளாசும் பிரபலம்!
  • Views: - 478

    0

    0