திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீச்சு.. ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்… கடலூரில் பதற்றம்…!!
Author: Babu Lakshmanan10 July 2023, 11:00 am
கடலூர் : திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே நல்லாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகியான மணிவண்ணன் என்பவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழா இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணியளவில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் உள்ளே செல்ல முயன்ற போதே, அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தூக்கி எரிந்துள்ளார். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சால் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படாத நிலையில், திமுக எம்எல்ஏ ஐயப்பனைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,
எம்எல்ஏவுக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா..? தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கினர்.
மேலும், அங்கே சுற்றி இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எம்எல்ஏ நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.