முட்டாள் அண்ணாமலை… கிரிமினல் ஆர்என் ரவி … ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு ; சர்ச்சையை கிளப்பிய திமுக எம்எல்ஏ..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 12:13 pm

கடந்த 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறையில் இருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். அமைச்சர் ரகுபதியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக பாஜக, கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுக தான் என்று ஆதாரத்தையும் வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும், கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்றும், பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தது.

அதுமட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் வெளியே எடுத்தது பாஜகவா..? திமுகவா…? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “வழக்கறிஞர் என்ற முறையில் பல கட்சியினரை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளேன். அனைத்து கட்சியினரின் வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன். தற்போது நான் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. 2023ல் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தோம். எனக்கும், கருக்கா வினோத்திற்கும் நேரடி தொடர்பு கிடையாது, என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று பதிவிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ள திமுக எம்எல்ஏ பரந்தாமன், அண்ணாமலை, ஆளுநர் ஆர்என் ரவி, பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக தாக்கி பதிவு போட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “தற்போது நான் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்பது, ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர் என்பதே பொருள். எந்த கட்சியிலும் நான் இல்லை, வழக்கறிஞர் தொழில் தான் செய்கிறேன் என்றால், ஏன் இந்த தன்னிலை விளக்கம்?

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதானோ..? Foolish IPS அண்ணாமலை, Criminal ஆர்என் ரவி, ஆளுநர் மாளிகை, தீவிரவாதி ஆர்எஸ்எஸ், Stupid தமிழக பாஜக, சொம்பு எடப்பாடி பழனிசாமி, எனக் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்தப் பதிவு சர்ச்சையான நிலையில், அதனை திமுக எம்எல்ஏ பரந்தாமன் நீக்கியுள்ளார். ஆனால், அவரது பதிவின் ஸ்கிரீன் ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 506

    0

    0