பாஜகவுக்கு தாவும் திமுக எம்எல்ஏ… வருகிறது இடைத்தேர்தல்? அண்ணாமலை போட்ட அசத்தல் ப்ளான்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 6:14 pm

திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கு.க.செல்வம், டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் பா.ஜ.க,வில் இணைந்தனர்.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னும், அதிருப்தியாளர்கள் சிலர், பா.ஜ.கவில் இணைந்தனர். அண்ணாமலை சுற்றுப்பயணம் சென்ற மாவட்டங்களில், தி.மு.க.,வினர் பா.ஜ.க.,வில் இணைந்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் அண்ணாமலை செல்வாக்கை தடுக்கும் வகையில், தி.மு.க.,வில் இருந்து சென்றவர்களை மீண்டும் இழுக்கும் படலத்தில், அக்கட்சி தலைமை இறங்கியுள்ளது.

பாஜகவுக்கு தாவும் திமுக எம்எல்ஏ... வருகிறது இடைத்தேர்தல்? அண்ணாமலை போட்ட அசத்தல் ப்ளான்!!

கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.,வில் இணைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க, தலைவராக இருந்த சரணவனையும் ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

பாஜகவுக்கு தாவும் திமுக எம்எல்ஏ... வருகிறது இடைத்தேர்தல்? அண்ணாமலை போட்ட அசத்தல் ப்ளான்!!

இதே போல சிவங்கை மாவட்ட திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களுடன் திமுக பேசி வருகிறது. இதனால் பாஜக தற்போது வேறு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை திமுகவுக்க அளிக்க உள்ளது.

பாஜகவுக்கு தாவும் திமுக எம்எல்ஏ... வருகிறது இடைத்தேர்தல்? அண்ணாமலை போட்ட அசத்தல் ப்ளான்!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக அதிருப்தி எம்எல்ஏவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. திமுக தலைமை மீது உள்ள அதிருப்தியால் வெறுத்து ஒதுங்கிய எம்எல்ஏவை பாஜக அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு தாவும் திமுக எம்எல்ஏ... வருகிறது இடைத்தேர்தல்? அண்ணாமலை போட்ட அசத்தல் ப்ளான்!!

ஒரு வேலை அவர் திமுகவில் இருந்து விலகி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் அந்த தொகுதி எம்எல்ஏ சீட் காலி என அறிவிக்கப்படும். அப்படி இருந்தால், அந்த தொகுதியில் அண்ணாமலை மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என கணக்குபோட்டுள்ளதாம் கமலாலயம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…