திடீரென அறுந்து விழுந்த தேசிய கோடி.. கடுப்பான திமுக எம்எல்ஏ.. அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan15 August 2023, 1:54 pm
சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றிய போது, திடீரென அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ, அருகிலிருந்தவரை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும், சென்னை கொத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றினார். அப்போது, எதிர்பாராத விதமாக, மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த தேசிய கொடி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அருகில் இருந்தவரை அடிக்க கையை ஓங்கிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தேசிய கொடி அறுந்து விழுந்ததால், அருகில் இருந்தவரை திமுக எம்எல்ஏ ஒருவர், அருகில் இருந்தவரை தாக்க முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.